pages

Thursday, October 14, 2010

குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து !!!




திருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கணவன் குளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தார் பெட்ரோலியம் இன்சினியரிங் படித்த பெண்.

குளிப்பதால் சிலவகையான ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறி ஒரு மாதமாக குளிக்க மறுப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக எகிப்து அரபு நாளிதழ் 'எகிப்து டுடே' தெரிவித்துள்ளது.

மருத்துவரிடம் பரிசோதித்ததில் கணவருக்கு தண்ணீரில் அலர்ஜி இருப்பது உறுதியானது. எனினும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அந்த ஒவ்வாமை தடையல்ல என்பதால் குளிக்கும்படி கோரிய மனைவிமீது கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

குளிக்காமல் இருப்பது தனது பழக்கம் என்பதால் அதைக் கைவிட முடியாது என்றும் அதற்காக விவாக ரத்து செய்யவும் முடியாது என்று மறுத்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அப்பெண் அணுகியுள்ளார். இஸ்லாமிய ஷரிஆ சட்டஅடிப்படையில் நியாயமான காரணங்களால் பிடிக்காத கணவனை மணப் பெண் தானாக முன்வந்து விவாகரத்து செய்யலாம் என்பதால் குளிக்காத கணவனை விவாகரத்து செய்து அப்பெண் தலை முழுகியுள்ளார்!

1 comment:

DrPKandaswamyPhD said...

நல்ல முடிவு.

Post a Comment