pages

Sunday, November 15, 2009

Flying car.. first delivery is expected in 2011


2011 இல் வருகிறது பறக்கும் கார்
flying-car.jpg

ஜே
ம்ஸ்பாண்ட் படங்களில் வருவதுப் போல், பறக்கும் காரை நிஜத்தில் உருவாக்கி வருகிறது அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ராப்யூஜியா நிறுவனம். ரூ.1கோடி விலையுள்ள இந்தக் கார் 2011 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
டிரான்சிஷன் ரோடபிள் ஏர்கிராப்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கார் சாலையிலும் ஓடும். இறக்கையை விரித்தால் வானிலும் பறக்கும்.

தற்போது இதன் மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் அடுத்தக்கட்டமாக அமெரிக்க அரசின் அனுமதியோடு, 2011 இல் பறக்கும் கார் அறிமுகமாகுமாம்.

இதுபோன்ற சிறியரக பறக்கும் காரை ஓட்ட சாதாரண பைலட் உரிமம் போதுமானது. சாலையில் செல்லும்போது இதன் இறக்கைகளை மடிக்கலாம். வானில் பறக்கத் தயாராகும் போது, அடுத்த 30 விநாடிகளில் இறக்கையை விரித்துவிடலாம்.
பறக்கும் கார் என்றாலும் விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகத்தான் இது பறக்கவேண்டும் என்பதால், விமான கட்டுப்பாட்டு அறையின் அனுமதியும் வேண்டும். விமான நிலையம் வரை சாலையில் ஓட்டிக்கொண்டு வரவேண்டும். பின்னர் விமான ஓடுபாதையில் ஓடி, வானில் பறக்கவேண்டும். அடையவேண்டிய இடம் வந்ததும் இறங்கி சாலையில் காராக மாற்றி ஓட்டிச் செல்லலாம். மோசமான வானிலையிலும் இந்த பறக்கும் காரில பறக்கலாம்.

No comments:

Post a Comment