pages

Tuesday, September 7, 2010

காதலிப்பவர் கவனத்திற்கு...




1) வேகமாக காதலைக் கொண்டு நடத்தாதீர்கள். மெதுவாக உங்களது காதலை நகர்த்துங்கள். அது காதலில் நல்ல ஆரம்பத்தையும் அமைதியையும் தரும்.



2) தொடர்ச்சியாக நீண்ட நாட்களுக்குக் கதைப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். கூடுதலான காதல்கள் நிலைத்திருப்பது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வரை மட்டுமே.

3) உங்களைப் பற்றிய இரகசியங்களையும் முழுமையான தகவல்களையும் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள். ஒருவரில் இருக்கும் இரகசியமும் மறைந்துள்ள விடயங்களுமே மற்றவர்களை உங்கள் பால் இழுத்து எடுக்கும்.

4) ஒரு முறை பகிர்ந்து கொண்ட உங்களைப் பற்றிய விடயத்தை மீண்டும் பேசாதீர்கள். இது மற்றவருக்கு தலை இடியாய் அமையலாம்.

5) உங்களால் நிருப முடியாத அளவுக்கும் இலகுவாக மாட்டிக்கொள்ளும் வகையிலும் பொய்களைப் பொழிய வேண்டாம். இது நம்பகத் தன்மையைக் குறைக்கும்.

6) எப்பொழுதும் மற்றத் தரப்பினரை நன்கு அறிந்து கொண்டு உங்கள் காதல் காய்களை நகர்த்துங்கள். ஒவ்வொரு நபரினதும் அறிவுத் திறன் வேறுபடும்.

7) உங்களது இலக்கை மனதில் கொண்டு காதல் செய்யுங்கள். முற்றுப் புள்ளி, காட் புள்ளி, வியப்புக் குறி, ஏன் கேள்விக் குறிகளும் காதலில் உண்டு.

No comments:

Post a Comment