pages

Sunday, December 6, 2009

வருது வருது “கூகுள் ஃபோன்” வருது!



போற போக்கப் பார்த்தா 21-ம் நூற்றாண்டின் மந்திரச் சொல் கூகுள்னு ஆயிடும் போலிருக்கு! ஆமாங்க, கூகுள் நிறுவனத்தோட சேவைகளை எல்லாம் பார்க்கும்போது சொர்க்கம்னு ஒன்னும் புதுசா எதுவும் இல்லை, கூகுள் சேவைகளை எல்லாம் பயன்படுத்தினீங்கன்னா பூமியே சொர்க்கமாயிடும் அப்படின்னு தோனுது.
இருக்காதா பின்ன?! சமீபத்துல வந்த ஒரு கூகுள் பத்தின செய்திதாங்க இந்த பதிவுக்கு காரணம். சரி, பூமியையே சொர்க்கமாக்குற அளவுக்கு அப்படி என்ன பெரிய சேவைய அறிவிச்சிருக்கு கூகுள்? என்னன்னு பார்ப்போம் வாங்க….

கூகுள் ஃபோன்
அதாவது பல மாதங்களா வந்துக்கிட்டிருந்த நெறைய புரளிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி கூகுள் ஃபோனோட சில புகைப்படங்கள் வெளிவந்திருக்கு! (பார்க்க படங்கள்)
ஆண்ட்ராய்ட் 1.5 (Android 1.5) அப்படிங்கிறது விண்டோஸ் மாதிரி யான ஆனா, கைத்தொலைபேசிகளுக்கான (அதாங்க செல்ஃபோன்) ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம். இந்த ஓ.எஸ்ஸோட புது வகையான ஆண்ட்ராய்ட் 2.0 -வை பயன்படுத்திதான் புதுசா வரப்போற கூகுள் ஃபோன் இயங்கப்போவதா சொல்றாங்க!
அதெல்லாம் சரிப்பா….இப்போ இருக்குற கைத்தொலைபேசிகள்ல இல்லாதது அப்படியென்ன விஷேசமா இருக்கு இந்த கூகுள் ஃபோன்லன்னுதானே கேட்குறீங்க?
ஒன்னு இல்ல, ரெண்டு இல்லைங்க நெறைய வி
ஷேசங்கள் இருக்குது இந்த கூகுள் ஃபோன்ல!
சரி, கூகுள் ஃபோனோட விஷேசங்கள் என்னென்னன்னு ஒவ்வொன்னா பார்க்கலாம் வாங்க…..
1. “ட்ராய்ட்”, அப்படிங்கிற ஃபோன்ல மட்டுமே இப்போதைக்கு பயன்படுத்தப்படுற, ஆண்ட்ராய்ட் 1.5 வின் புதுவெளியீடான “ஆண்ட்ராய்ட் 2.0″ பயன்படுத்தப்போற முதல் ஸ்மார்ட் ஃபோன் கூகுள் ஃபோன்தான்!
2. வாய்ப் (V0iP, Voice Over Internet Protocol) இந்த சேவையப் பத்தி உங்கள்ல பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும்(பலர் பயன்படுத்துவீங்க!). அதாவது, தொலைபேசி இல்லாம இணையதள இணைப்பு மூலமாகவே இலவசமாகவோ அல்லது மிகவும் குறைந்த கட்டணத்திலோ இந்த வாய்ப் பயன்படுத்தி உலகத்திலுள்ள அத்தனை நாடுகளுக்கும் பேச முடியும்!
இந்த சேவை இதுவரை கணினிகளுக்கு மட்டுமே. ஆனால், உலகில் முதல் முறையாக VoiP சேவையை கைத்தொலைபேசிகளுக்கும் வழங்கப் போகும் முதல் நிறுவனம் கூகுள்தான்?! அதுவும் கூகுள் ஃபோன் மூலமாகவே இருக்கும் என்கின்றனர்!
3. கூகுள் வாய்ஸ் அப்படிங்கிற ஒரு சேவை (இப்போ அமெரிக்காவில் மட்டும்) மூலமா, பல தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புற வசதியை கூகுள் வழங்குவது உங்கள்ல சில பேருக்கு தெரிஞ்சிருக்கலாம். இந்த சேவையை முதல் முறையா கைத்தொலைபேசிக்கு கூகுள் ஃபோன் மூலமா கூகுள் நிறுவனம் வழங்கப்போகிறது!
4. கூகுள் லேட்டிட்யூட் அப்படிங்கிறது நம்ம இருக்கிற இடத்தோட அடையாளத்தை கூகுள் மூலமா நம்ம நண்பர்களுக்கு தெரியப்படுத்தற ஒரு சேவை. இந்த சேவையும் கூகுள் ஃபோன்ல உண்டாம்!
5. கூகுள் மேப்ஸ் அப்படிங்கிற ஒரு புது சேவை GPS தொழில்னுட்பத்தை பயன்படுத்தி நாம எங்க போகனுமோ அங்க நம்மள கையப் புடிச்சி கூட்டிட்டு போகாத ஒரு குறையா சந்துக்கு சந்து விவரம் சொல்லி கூட்டிட்டு போய் விடற ஒரு கூகுள் சேவை. இதுவும் நம்ம கூகுள் புகழ் கூகுள் ஃபோன்ல உண்டுங்கோவ்!
என்ன அவ்ளோதானான்னு கேக்குறீங்களா? ம்ஹூம்….இன்னும் இருக்குங்க. நாம மேல பார்த்த எல்லா

G1 Google phone
சேவையையும் தூக்கிச் சாப்பிடற மாதிரி ஒரு சேவை இருக்கு இந்த கூகுள் ஃபோன்ல! அது என்னவாயிருக்கும்னு யாராச்சும் சொல்லுங்க பார்க்கலாம்? அதோ…யாரோ சொல்ற மாதிரி கேக்குதே…..?!
சரி நானே சொல்லிடறேன். அதுதாங்க இணையதளப் இணைப்புப் புகழ் “வைஃபை” (WiFi) சேவை. அதாவது, நாம பார்த்த எல்லா கவர்ச்சிகரமான சேவைகளுடன் சேர்த்து WiFiசேவையையும் கூகுள் ஃபோன் மூலமா கூகுள் நிறுவனம் தர நிறைய வாய்ப்பு இருக்கிறதுன்னு வல்லுனர்கள் சொல்றாங்க!
என்னங்க, எங்க கெளம்பிட்டீங்க? கூகுள் ஃபோன் வாங்கவா? இருங்க இருங்க, நீங்க கூகுள் ஃபோன் முதல்ல அறிமுகமாகப்போற அமெரிக்காவிலேயே இருந்தாக்கூட 2010 ஜனவரி மாதம் வரைக்கும் காத்திருந்துதான் ஆகனும்.
நானும்தாங்க கூகுள் ஃபோன் வருகைக்காக ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன்….!

No comments:

Post a Comment