pages

Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Monday, October 25, 2010

IRAJ இசைத் தொகுப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமா?

 





(21.10.2010 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை)

ஆரம்ப காலத்தில் சிங்கள மன்னர் ஒருவரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய முஸ்லிம் பெண்மணி ஒருவருக்கு அந்த மன்னர் ஒரு கிராமத்தையே பரிசளித்ததாக வரலாறுகளில் நாம் படித்திருக்கிறோம்.

ஆனால் இன்று பொலிசாரிடமிருந்து பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவரைக் காப்பாற்றும் முஸ்லிம் யுவதி ஒருவருக்கும் குறித்த இளைஞனுக்குமிடையில் காதல் மலர்வதை புதிய கதையாகப் படைத்திருக்கிறார், இலங்கையின் பிரபல சிங்களப் பாடகரும் தயாரிப்பாளருமான இராஜ் வீரரத்ன.

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள `சித்தி மனீலா' எனும் தலைப்பிலான குறித்த வீடியோ இசைத் தொகுப்பில் அடங்கியுள்ள இப் பாடலானது இலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்தையும், குறிப்பாக இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தவறான புரிந்துணர்வை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் முற்பட்டிருக்கிறது.

அதான் ஒலியுடன் இப்பாடல் தொடங்குகிறது. பாதாள உலகத்தைச் சேர்ந்த குறித்த சிங்கள இளைஞனை (இப் பாத்திரத்தில் இராஜ் நடித்துள்ளார்) பொலிசார் துரத்திச் செல்கிறார்கள். அப்போது தனது வீட்டு முற்றத்தில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெண் ஒருவர் இவ் இளைஞனுக்கு அடைக்கலம் கொடுத்து பொலிசாரிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார்.

இதனால் இவ் இளைஞனுக்கு குறித்த முஸ்லிம் யுவதியின் மீது காதல் மலர்கிறது. பின்னர் இந்த யுவதி தனது சக முஸ்லிம் யுவதிகளுடன் ஹிஜாப் அணிந்து வீதியால் நடந்து வரும்போது அவ் இளைஞர் தனது காதலை வெளிப்படுத்தும் முகமாக ரோஜாப் பூ ஒன்றை அவளுக்கு நீட்டுகிறார். அந்த யுவதியும் எந்த மறுப்புமின்றி அதனை வாங்கிச் செல்கிறார்.

பின்னர் இப் பாடலில் மாதம்பிட்டிய பள்ளிவாசல் காட்டப்படுகிறது. இப் பள்ளிவாசலிலிருந்து குறித்த முஸ்லிம் யுவதி பல ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறுமிகள் புடைசூழ வெளியே வருகிறார். அவளைப் பார்ப்பதற்காக குறித்த சிங்கள இளைஞர் தொப்பி அணிந்து பள்ளிவாசலுக்கு வருகிறார்.

பின்னர் இவ் இளைஞர் அப் பெண்ணின் வீட்டுக்கு இரவு வேளையில் வருகிறார். இருவரும் தவறான முறையில் நடந்து கொள்கின்றனர். பின்னர் இவ் இளைஞன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரும்போது அதனை அப் பெண்ணின் தந்தை அவதானிக்கிறார். இருவருக்குமிடையில் உரையாடல் நடந்த பிற்பாடு தந்தையின் சம்மதத்துடன் இப் பெண்ணை அவ் இளைஞர் அழைத்துச் செல்கிறார்.

இவர்கள் இருவரும் காரில் பயணிக்கும் போது தொப்பி அணிந்த ஒரு பாதாள உலக கோஷ்டித் தலைவன் இவர்களை வழி மறித்து துப்பாக்கியால் சுடுகிறார். உடனே அந்த யுவதி முன்னால் பாய்ந்து தனது காதலனைக் காப்பாற்ற முயற்சித்து பின்னர் சூடுபட்டு இறக்கிறார். பின்னர் அவளது காதலனும் சுட்டுக் கொல்லப்படுகிறார்.  இக் காட்சியுடன் பாடல் முடிவுக்கு வருகிறது. முடியும் போதும் பின்னணியில் அதான் ஒலிக்கிறது. இடையிலும் ஒரு தடவை அதான் ஒலியைக் கேட்க முடிகிறது.

பாடலில் இடம் பெற்ற சில காட்சிகள்...

ஒட்டு மொத்தத்தில் இப் பாடல் முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறு தவறான கருத்தியல்களைக் கட்டமைக்க முற்பட்டுள்ளது.

முஸ்லிம் யுவதிகள் ஒழுக்கமற்றவர்களாகவும் முஸ்லிம் இளைஞர்கள் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர்களாவும் இங்கு சித்திரிக்கப்பட்டுள்ள அதேவேளை மாதம்பிட்டிய பள்ளிவாசலில் யாருடைய அனுமதியுடன் இந்த பாடல் காட்சியாக்கப்பட்டது? இதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் உடந்தையாக இருந்ததா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன. அத்துடன் இறையில்லத்தை நோக்கி அழைக்கும் புனித அதான் ஒலியை ஒரு மோசமான பாடலில் உட்புகுத்துவதற்கான அனுமதியை அதன் தாயரிப்பாளருக்கு வழங்கியது யார்? மொத்தத்தில் இவ்வாறானதொரு தவறான கருத்தியலை கட்டமைப்பதை பார்த்துக் கொண்டு முஸ்லிம் தலைமைகள் வாளாவிருக்க முடியுமா?

எனவேதான் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உடனடியாகக் கவனம் செலுத்தி இப் பாடல் தொகுப்புக்கு தடை விதிப்பதோடு பாடகர் இராஜுக்கு இதன் பாரதூரத்தை தெளிவுபடுத்தவும் முன்வர வேண்டும்.

Monday, October 18, 2010

தில்லாலங்கடி பாட்டி


அமெரிக்காவின் நாகல்ஸ் நகரின் போதை தடுப்பு பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அதிர்ச்சி தரும் வகையில் 94  வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் போதை பொருட்களுடன் (கஞ்சா) கைது செய்யப்பட்டுள்ளார் .இவரை கைது செய்த அதிகாரி தெரிவிக்கையில் போதைபொருள் சம்பந்தமாக கிடைத்த ரகசியதகவலை தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தியபோது 94 வயதுடைய முதியவர் குற்றவாளியாக கைதுசெய்யப்ட்டார் இவரை சோதனை செய்யும் பொது இவரின் உடலில் 5 kg நிறையுடைய  கஞ்சா மறைத்து வைக்கபட்டிருந்தன அதனையும் நாங்கள் பறிமுதல் செய்தோம் என தெரிவித்தார் .





Thursday, October 14, 2010

குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து !!!




திருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கணவன் குளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தார் பெட்ரோலியம் இன்சினியரிங் படித்த பெண்.

குளிப்பதால் சிலவகையான ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறி ஒரு மாதமாக குளிக்க மறுப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக எகிப்து அரபு நாளிதழ் 'எகிப்து டுடே' தெரிவித்துள்ளது.

மருத்துவரிடம் பரிசோதித்ததில் கணவருக்கு தண்ணீரில் அலர்ஜி இருப்பது உறுதியானது. எனினும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அந்த ஒவ்வாமை தடையல்ல என்பதால் குளிக்கும்படி கோரிய மனைவிமீது கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

குளிக்காமல் இருப்பது தனது பழக்கம் என்பதால் அதைக் கைவிட முடியாது என்றும் அதற்காக விவாக ரத்து செய்யவும் முடியாது என்று மறுத்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அப்பெண் அணுகியுள்ளார். இஸ்லாமிய ஷரிஆ சட்டஅடிப்படையில் நியாயமான காரணங்களால் பிடிக்காத கணவனை மணப் பெண் தானாக முன்வந்து விவாகரத்து செய்யலாம் என்பதால் குளிக்காத கணவனை விவாகரத்து செய்து அப்பெண் தலை முழுகியுள்ளார்!

Saturday, October 9, 2010

குரங்கு குழந்தை ! அதிர்ச்சியில் பெற்றோர் !



அமெரிக்காவை சேர்ந்த பெண்ணொருவர் குரங்கு வடிவிலான குழந்தையை பெர்றேடுதுள்ளார். இதனால் பெற்றோர்கள் பெரும் வேதனைக்கும் ,அதிர்ச்சியும் உள்ளாகி உள்ளனர்.

இந்த குழந்தை பற்றிய வீடியோ ........


Wednesday, October 6, 2010

i Drive ஆப்பிளின் மற்றுமோர் புதிய வசதி !

ஜேர்மனை சேர்ந்த பல்கலைகழக மாணவனால் ஆப்பிள் i Phone  மூலம் வாகனங்களை சுயமாக செயல்பட கூடிய (remote controller) அமைப்பை கண்டுபிடித்துள்ளார்.இதற்கு  i Drive என பெயரிட்டுள்ள இவர் தனது கண்டுபிடிப்பை மக்கள் முன்ன்னிலாலையில் காண்பித்து பார்போரை பரவசத்தில் ஆழ்த்தினார் .
இவ்வரிய கண்டுபிடிப்பை மேற்கொண்ட மாணவர்  குறிப்பிடுகையில்  "Remote Controller மூலம் இயங்கும் காரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு அதை தற்போது செய்தும் விட்டேன் . நமக்கு தேவையான படி சில மாற்றங்களை வாகனத்தில் மாற்றியமைத்து இதனை நம் வாகனங்களிலும் பயன் படுத்தலாம் இதனுள்  இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால்
front & camera ,GPS,Wi-Fi போன்ற வசதிகளுடன் இதனை பயன் படுதகூடியதாகும்" என குறிப்பிட்டார்.










Sunday, October 3, 2010

தமிழில் இணையத்தள முகவரி இலங்கை சாதனை !

உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு 'அய்கன்" (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.

இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை 'அய்கன்" (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது.

'அய்கன்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் Internet Corporation for Assigned Names and Numbers நிறுவனம் இணையத்தள முகவரிகளைப் பதிவுசெய்து பாதுகாக்கும் இலாபகரமற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மரினா டெல் ரே (Marina Del Rey) நகரத்தை தலைமைப் பீடமாக கொண்ட நிறுவனமாகும்.

'இலங்கை" மற்றும் 'லங்கா" முதலான இணையத்தள முகவரியை பெற்றுக் கொள்வதாயின் www.nic.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்று கொள்ளலாம்.

இந் நடைமுறையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந் நடைமுறையை தற்போது தேசியளவிலேயே பாவிக்க முடியும் எனவும், இன்னும் சில காலத்திற்கு பிறகு சர்வதேச ரீதியில் பாவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இணையத்தள முகவரியைப் பதிந்து கொண்டவர்கள் புதிய முறையினை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புதிய நடைமுறையால் தமது சொந்த மொழியில் இலகுவாக இணையத்தளத்தை எவரும் பயன்படுத்த முடியும்.

உதாரணமாக வீரகேசரி இணையத்தளத்தை பார்வையிடுவதாயின் http://தளம்.வீரகேசரி.இலங்கை என்று தட்டச்சு செய்யலாம்.

இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண எமது வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில்,

"எமது சொந்த மொழியில் இணையத்தள முகவரியை முதன் முதலாக ஆசியாவில் மட்டுமல்ல, முழு உலகிலும் அறிமுகப்படுத்திய பெருமை எமக்கு உண்டு. தாய்மொழியில் இணையத்தள முகவரியை 'இலங்கை' என்று தமிழிலும், 'லங்கா' என்று சிங்களத்திலும், நாம் அறிமுகபப்டுத்தியுள்ளோம்.

அதுவும் முதன் முறையாக தமிழில் இணையத்தள முகவரி உருவாகியுள்ளது இலங்கையில் தான் என்பதும் பெருமைக்குரியதே. இதனூடாக தமிழ் - சிங்கள் மக்களிடையே சமத்துவ நிலைமை உருவாக்கம் பெற்றுள்ளது" என்றார்.

அய்கன் (ICANN) பணிப்பாளர் சபை உறுப்பினர்களில் ஒருவரான ராம் மோகன் கருத்து தெரிவிக்கும் போது,

"ஆசியாவில் தமிழில் தனது நாட்டின் பெயருடன், உலக இணையத்தள முகவரியை முதன் முதலாக அறிமுகப்படுத்திய ஒரே நாடு இலங்கை தான். இது ஒரு மாபெரும் சாதனை. இதனையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

முதன் முறையாக தாய்மொழியில் இணையத்தளத்தினூடாக, மின்னஞ்சலில் பயணிக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இணையத்தள முகவரியை சிங்களத்தில் 'லங்கா' என்றும் தமிழில் 'இலங்கை' என்றும் நாம் அடைந்து கொள்ள இது நமக்கு வாய்ப்பளிக்கின்றது.

இன்று மடி கணினி (லெப்டொப்) யைவிடவும் கையடக்கத் தொலைபேசி மூலமான இணையத்தள பாவனையாளர்கள் அநேகர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் 'லங்கா' மற்றும் 'இலங்கை' ஆகிய இணைய முகவரிகள் பிரபல்யம் அடையும் என்பதில் ஐயம் இல்லை" என்றார்.

நன்றி :-http://therinjikko.blogspot.com

Sunday, September 26, 2010

கத்தார் முதலிடம்...




Global Finance அமைப்பு 2010 இற்கான  உலக பணக்கார நாடுகளினதும், ஏழை நாடுகளினதும்  பட்டியலை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அடிபடையாக கொண்டு வெளியிட்டுள்ளது. அதன்படி மத்தியகிழக்கு நாடான கத்தார் பணக்கார நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. லக்சம்பேர்க் ,நார்வே முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை
பெர்ருகொண்டுள்ளன, இந்த பட்டியலில் இலங்கை 113 ஆவது இடத்தையும் ,இந்தியா 128ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மிகவும் ஏழை நாடுகளின் பட்டியலில் கொங்கோ முதல் இடத்தையும் ஜிம்பாப்வே மற்றும் புருண்டி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளன. இந்த பட்டியலில் முதல்  10 இடங்கள பெற்றுள்ள உலகின் பணக்கார நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது..

01.கத்தார்    (GDP -90,149)
02. லக்சம்பேர்க்    (GDP-79,411)
 03.நார்வே    (GDP-52,964)
04. சிங்கப்பபூர்   (GDP-52,840)
05.புருனை   (DDP-48,714)
 

 06.அமெரிக்கா   (GDP-47,702)
 07.ஹாங்காங்   (GDP-44,840)
 08.சுவிற்சலாந்து   (GDP-43,903)
 09.நெதர்லாந்து   (GDP-40,601)
 10ஆஸ்திரேலியா   (GDP-39,841)
முழு பட்டியல் இங்கே...

Sunday, September 19, 2010

இளம் வீராங்கனை மரணம்...








25 வயதையுடைய Erica Blasberg என்கிற அழகான கோல்ப் விளையாட்டு வீராங்கனை கடந்த 10-05-2010 இல் தனது வீட்டில் இறந்து காணப பட்டார். இது தொடர்பாக 911 தகவல் தருகையில், "நாங்கள் இந்த இறப்பு தொடர்பாக ஒரு தொலைபேசி அழைப்பைப் பெற்றோம். அவர் யார் எங்கிருந்து? போன்ற விபரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளவில்லை." என்றனர்.

Erica Blasberg இரண்டு வருடங்களில் ஆறு தடவைகள் Arizona வில் கோல்ப் விளையாட்டில் பங்கு பற்றியுள்ளதுடன், இரு தடவைகள் அமெரிக்க NCAA ஆகவும் ஆனதுடன் "2003 College Player of the year" என்ற பெருமைப் பெயரையும் பெற்றவர். இது போன்ற பல வெற்றிகளை சூடிக்கொண்ட இந்த இளம் வீராங்கனை இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..
மேலதிக முழு விபரமும் ஆங்கிலத்தில் அறிந்துகொள்ள abcnews

Friday, September 17, 2010

பெண்ணாக மாறிய பாம்பு....!




உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது.
கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற
போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது..
இது பற்றி  எபாஹ் குரிப்புகையில் "பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள் கூச்சளிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் 'உரு மாறினா என்ன?' எனக் குறிப்பிட்டது." என்று கூறினார்.
மேலும் குறிப்பிடுகையில் "வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்."

காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணைத் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டு வந்தனர். இது பற்றி பத்திரிகையாளர்கள் பரவலான செய்திகளையும் வெளியிட்டனர். அந்தப் பெண்ணின் பாதுகாப்புக் கருதி, மத்திய சிறைச் சாலையில் சேர்க்கப் பட்டார். 

இது பற்றிக் காவல் துறை பேச்சாளர் குறிப்பிடுகையில், "அது ஒரு பாம்புப் பெண் அல்ல. அவர் மனநிலை பாதிக்கப் பட்டு வெகு நாட்களாக அவர்களது குடும்பத்தாரால் காணாமல் போனார் என்று காவல் நிலையத்தி முறையீடு செய்யப் பட்டு தேடப் படுபவர் என்பதுடன், இவ்வாறு ஒரு பெண் பாம்பாக மாறுவது நடக்க முடியாத ஒன்று" என்றும் குறிப்பிட்டார்.


Monday, September 13, 2010

70 வருடங்கள் உணவு உண்ணாத ஒருவர்?

parhlad Jani



உலகில் பல்வேறு பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் கூடுதலானோர் சாதாரண மனிதர்கள் பட்டியலில் விரும்பியோ விரும்பாமலோ இயற்கையாகவே இடம் பிடித்து விடுவர். சிலர் அவற்றையும் தாண்டி சில அமானுஷ குணம்/வலு பெற்றவர்கள்.

இந்தியாவைச் சேர்ந்த Prahlad Jani என்ற 83 வயதுடைய இந்த வயதான மனிதர் தான் 70 வருடங்கள் எந்தவித உணவையோ அல்லது பானத்தையோ உட்கொள்ளவில்லை என்று அறிவித்துள்ளார்.

இதை நிருபிக்க வைத்திய பரிசோதனைகளையும் மேட்கொண்டுள்ளார். பரிசோதனையை மேற்கொண்ட வைத்தியர்கள், இந்த அனுபவத்திலிருந்து உயிர்கள் உணவின்றி எவ்வாறு உயிர் வாழலாம் என்பது பற்றிய சிந்தனைக்கு ஒறு அடிக்கல் வைக்கலாம் என்றும் சந்திரனில் வசிப்பதற்கு ஒறு முயற்சியாக இதைக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுபற்றி Prahlad Jani குறிப்பிடுகையில் தனது எட்டாம் வயதில் தான் கடவுளிடம் இருந்து பெற்ற வாரமே இது என்றும் குறிப்பிடுகிறார்.






parhlad Jani 2

via