pages

Tuesday, December 1, 2009

Admiring ‘Avatar’- Trailer



அசத்தவரும் ஆங்கிலத் திரைப்படம் ‘அவதார்’! - டிரெய்லர்
avatar1.jpg




டைட்டானிக், ஏலியன்ஸ், டெர்மினேட்டர் ஆகிய பிரமாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஜேம்ஸ் கேமருன். அவருடைய அடுத்த படைப்பு ‘அவதார்’. டிசம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிடப்பட உள்ள அவதார் கற்பனைக்கும் எட்டாத உலகைக் காட்ட வருகிறது. புராணம், இதிகாசம் இவற்றோடு நவீனத்தையும குழைத்துக் கூறப்படும் கதை இது. நான்கு வருடத் தயாரிப்பிற்குப் பிறகு, வெளியாகிறது அவதார்.
வீல் சேரில் அமர்ந்தபடி வரும் உடல் ஊனமுற்ற, முன்னாள் கடற்படை அதிகாரி ஜேக் சுலியின் பார்வையில் இருந்து கதை துவங்குகிறது. உடல் ஊனமுற்று விட்டாலும் மனத்தளவில் அவர் இன்னும் போராளி தான். பண்டோரா என்ற இடத்தில் கிடைக்கும் தாதுப்பொருள் ஒன்று உலக நாடுகளின் எரிபொருள் தேவையை பூர்த்திச் செய்யும் என கண்டறியப்படுகிறது. அதற்காக காலச்சக்கரத்தில் ஏறி பின்னோக்கி செல்ல நியமிக்கப்படுகிறார் ஜேக் சுலி.
பண்டோரா பகுதி, மனிதர்கள் நுழைய முடியாத அளவுக்கு நச்சு தன்மை மிக்கதாக இருக்கிறது. அதனால் பண்டோரா பகுதியில் அந்த காலத்தில் வாழ்ந்த ஒரு மனிதனின் டிஎன்ஏவையும், நவீன மனிதனின் டிஎன் ஏவையும் சேர்த்து புதிய அவதாரம் படைக்கப்படுகிறது. அது வேறு யாருமல்ல, ஜேக் சுலிதான். புதிய அவதாரம் எடுத்ததால் அவரால் நடக்க முடிகிறது.
பண்டோராவில் அரிய எரிபொருள் இருக்கும் இடத்தை நவி என்கிற வித்தியாசமான மனித இனம் காபந்து செய்து வருகிறது. அவர்களை ஒடுக்கி, அந்த இடத்தை கைப்பற்றும் பொறுப்பு ஜேக் சுலியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அங்குச் செல்லும் ஜேக்கை பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறாள் மக்கள் கிறார்கள் நேத்ரி என்கிற நவி இனப் பெண். அவளுடைய அழகு மற்றும் அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறையைக் கண்டு அதிசயிக்கும் ஜேக், அவர்களில் ஒருவராக மாற விரும்புகிறார். அப்படி மாற அவருக்கு வைக்கப்படும் தேர்வுகள் ஆச்சரியமானவை, கடுமையானவை. இறுதியில் அவர்களில் ஒருவராக மாறிவிடும் ஜேக் சுலி, அந்த மக்களை வைத்துக்கொண்டு பூமிக்கு எதிரான சதி ஒன்றை முறியடிக்கும் வேலையில் களம இறங்குகிறார். க்ளைமாக்சில் என்னவாகிறது என்பது படம் வந்தால் தெரியும். ஆனால், அசத்தப் போவது நிஜம்.
சாம் வொர்த்திங்டான், ஸோ சல்டானா, ஸ்டீபன் லேங், மிஷேல் தரோட்ரிகியுஸ், சிகோர்னே வீவர் ஆகியோர் நடித்துள்ளனர்.
TRAILER.........................



No comments:

Post a Comment