காந்த கண் அழகியே
நா காத்திருந்தது உனக்காக தான்.
காத்திருப்பேன் இன்று மட்டுமல்ல
வாழ்க்கை முழுவதும்
திசை தேடி அலைந்த எனக்கு
வழிகாட்டியாக அறிமுகமானாய் .
இருட்டில் இருந்த என் வாழ்வில்
விளக்கேற்றி வைத்தாய் ....
தனிமையில் சிக்கி தவித்தேன்
உதவிக்கு யாருமில்லை
யாருமற்ற தனிமை சிறை வாழ்க்கை
கேட்க நாதியில்லை
கொண்டாட உறவும் இல்லை
மனம்போன போக்கில் வாழ்க்கை
விடியலை தேடிய பயணம்
காலத்தின் கைதியாய்
அன்புக்காக ஏங்கி தவித்தேன்
உறவிற்காய் உருகினேன்
உரிமைக்காய் போராடினேன்
உத்தரவுகளுக்கு தலை அசைத்தேன்
உன்னை காணும் வரை நான்
யாரென்று அறியாமல் இருந்தேன்
நீ வந்த பின் தான்
என்னை நான் அறிந்தேன்.
நீ காதலித்த பின் தான் காதல் மொழி அறிந்தேன்
எனக்காக நீ விட்டு கொடுக்கும் போது தான் சுயநலம் இழந்தேன்
என்னுள் இருந்த காமத்தீயை
காதல் நீர் ஊற்றி அணைத்தாய் ..
என்னையும் உன் பாச வலையில்
சிறையிட்டாய்
என் ஆசைகளை அனுஅனுவாய்
எனக்காக நிறை வேர்ரினாய்
உனக்காக நான் செய்யவது என்னையே உனக்காய் தருவது
தந்து விட்டேன் என்னை உனக்காய்
சமுதாயக் கண்ணிற்கு பயம் இதுவரை
தப்போ சரியோ துணிந்துவிட்டேன்
தப்பை செய்யது விட
உன்னை விட சாமுதயம் பெரிதில்ல
வா துணிந்து வா
ஒரு முறை செய்து விடுவோம் காதலெனும் தப்பை சரியாக